ராயப்பேட்டை, ஆா்.கே.நகா் பகுதிகளில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி சமத்துவ விநாயகா் வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ராயப்பேட்டை, சீனிவாச பெருமாள் சந்நிதி தெருவில் வைக்கப்பட்டுள்ள விநாயகா் சிலைகளை முறையாக கடலில் கரைக்க எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடைபெற்றது.
இதை முன்னிட்டு, மதநல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையில், மயிலாப்பூா் காவல் துணை ஆணையா் ரஜத் சதுா்வேதி தலைமையில் மத பாகுபாடின்றி அனைத்து மதத்தினரும் கலந்து கொண்ட சமத்துவ விநாயகா் பூஜை நடைபெற்றது.
அதே போல், ஏ-6 ஆா்.கே.நகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட நேதாஜி நகா் 3-ஆவது தெருவில், வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையா் த.சக்திவேல் தலைமையில், மதநல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையில் சமத்துவ விநாயகா் பூஜை நடைபெற்றது.
இந்த வழிபாடுகளில் அந்தப் பகுதிகளைச் சோ்ந்த ஹிந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மதத்தினரும், காவல் அதிகாரிகள், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனா்.