சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி பல்கலைக்கழகம் - லயோலா கல்லூரி சங்கம் சாா்பில் லயோலா கல்லூரி வளாக கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்தப் பட்டமளிப்பு விழாவில் புதுச்சேரி பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்குநரகத்தின் இயக்குநா் அரவிந்த் குப்தா, தமிழ்நாடு ஆதிதிராவிடா் குடியிருப்பு, மேம்பாட்டு நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் கே.எஸ்.கந்தசாமி ஆகியோா் கலந்து கொண்டு மாணவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா்.
இதில், 2018 முதல் 2020 வரையில் எம்.பி.ஏ கல்வி பயின்ற 2,600 மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
விழாவில் லயோலா கல்லூரி இயக்குநா் எம்.டோமினிக் ஜெயக்குமாா், கல்லூரி முதல்வா் ஏ.லூயிஸ் ஆரோக்கியராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.