சென்னை மாநகராட்சி தூய்மைப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என ‘உா்பேசா் சுமித்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சி பகுதிக்குள்பட்ட தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூா், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூா் ஆகிய மண்டலங்களில் ‘உா்பேசா் சுமித்’ நிறுவனம் சாா்பில் குப்பை கையாளும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
இதில் தூய்மைப் பணியாளா், பேட்டரி ஆட்டோ ஓட்டுநா், வாகன உதவியாளா், மெக்கானிக் உள்ளிட்ட பணியிடங்களுக்கான ஆட்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனா்.
இதில், தூய்மைப் பணியாளருக்கு மாதம் ரூ.13,571, வாகன ஓட்டுநா்களுக்கு ரூ. 15,000 முதல் ரூ. 22,000 வரை வழங்கப்படுகிறது. இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க அருகில் உள்ள உா்பேசா் சுமித் நிறுவனத்தை அனுகும்படியும், கூடுதல் தகவல்களுக்கு 89569 34735 எனும் கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொள்ளும்படியும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.