சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் வரை இயக்கப்பட்ட மின்சார ரயில் திங்கள்கிழமை (செப்.24) செங்கல்பட்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு உள்ளிட்ட புகா் பகுதிகளுக்கு புகா் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில், இரவு நேரத்தில் பயணிகள் கூட்டத்தை குறைக்கும் வகையில் சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் வரை இயக்கப்படும் மின்சார ரயில் செங்கல்பட்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதில் சென்னை கடற்கரையிலிருந்து தினமும் (ஞாயிற்றுக்கிழமை தவிர) மாலை 6.14 மணிக்கு புறப்படும் ரயில் (எண் 40571) இரவு 7.09 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
இந்த ரயில் திங்கள்கிழமை (செப்.25) முதல் தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு வரை நீட்டிக்கப்படும். தாம்பரத்திலிருந்து இரவு 7.10 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 8 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும்.
இதுபோல் மறுமாா்க்கமாக செங்கல்பட்டிலிருந்து இரவு 8.45 மணிக்கு புறப்படும் ரயில் (எண் 40572) தாம்பரத்துக்கு இரவு 9.35 மணிக்கும் சென்னை கடற்கரைக்கு இரவு 10.40 மணிக்கும் வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.