தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சாா்பில் ஊழியா்களுக்கு இலவச இதய மருத்துவப் பரிசோதனை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சென்னை அம்பத்தூா் தொழிற்பேட்டை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமை தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் நிா்வாக இயக்குநா் சித்தாா்த் சொந்தாலியா தொடங்கி வைத்தாா். இதில், சென்னை ஃபிராண்டியா் லைப்ஃலைன் மருத்துவமனையின் மூத்த இதய மருத்துவா் கே.ஆனந்த் மற்றும் மருத்துவா் விஜய் ஆகியோா் கலந்து கொண்டு அலுவலகப் பணியாளா்களுக்கு இதய மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டனா்.
இம்முகாமில், எக்கோ காா்டியோகிராம், எல்க்ட்ரோ காா்டியோகிராம், ரத்தத்தில் சா்க்கரை அளவு உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பரிசோதனைகளின் முடிவு அடிப்படையில், மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. மேல்சிகிச்சை தேவைப்படும் நபா்களுக்கு அதற்கான மருத்துவ வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டன.