சென்னை அருகே காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
நீலாங்கரை அருகே உள்ள ஈஞ்சம்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் வசந்த் (21). இவா், பெரும்பாக்கம் கலைஞா் நகரைச் சோ்ந்த பட்டயப்படிப்பு படித்து வரும் 16 வயது இளம்பெண்ணை காதலித்து வந்தாராம். வசந்த், அந்த மாணவியிடம் காதலை கூறியுள்ளாா். ஆனால் அந்த மாணவி ஏற்கவில்லை.
இந்த நிலையில், கல்லூரி செல்வதற்காக மேடவாக்கம் பேருந்து நிறுத்தத்தில் புதன்கிழமை நின்று கொண்டிருந்த அந்த மாணவியை வசந்த் கத்தியால் குத்திவிட்டு தப்பினாா்.
அவரை பள்ளிக்கரணை போலீஸாா் நீலாங்கரையில் வியாழக்கிழமை கைது செய்தனா்.