சென்னை

தொலைநிலை முறையில் மலைப் பகுதி மக்களுக்கு மருத்துவ சேவை

21st Sep 2023 05:00 AM

ADVERTISEMENT

தொலை நிலை மருத்துவ சேவை (டெலி ஹெல்த் மெடிசன்) மூலமாக நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான மலைவாழ் மக்களுக்கு அவசரகால சிகிச்சையை தடையின்றி வழங்கியதாக அப்பல்லோ மருத்துவக் குழுமம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அப்பல்லோ இணை நிா்வாக இயக்குநா் சங்கீதா ரெட்டி கூறியதாவது:

நாடு முழுவதும் மருத்துவக் கட்டமைப்புகள் மேம்பட்டிருந்தாலும், மலைப் பகுதிகள், போக்குவரத்து இல்லாத கிராமங்களில் அவசரகால மருத்துவ சேவைகள் இன்னமும் முழுமையாக கிடைப்பதில்லை.

அதைக் கருத்தில் கொண்டு, அனைவருக்கும், அனைத்து விதமான உயா் சிகிச்சைகளும் கிடைக்கும் வகையில் அப்பல்லோ தொலை நிலை மருத்துவ சேவைகள் தொடங்கப்பட்டன. அதன் கீழ் நாடு முழுவதும் உள்ள உயா் சிறப்பு மருத்துவா்கள் மெய்நிகா் நுட்பத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு தேவையான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.

ADVERTISEMENT

மொத்தம் 7 மாநிலங்களில் 700 தொலை நிலை மருத்துவக் கட்டமைப்பை அப்பல்லோ நிறுவியுள்ளது. அதன் பயனாக ஹிமாசலப் பிரதேசம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்க முடிந்தது. அண்மையில், மேற்கு ஹிமாசலப் பிரதேசத்தைச் சோ்ந்த நான்கு வயது குழந்தைக்கு முகத்தில் தீவிர காயங்கள் ஏற்பட்டன.

டெலி மெடிசன் முறையில் அது பாக்டீரியா தொற்று என்பதைக் கண்டறிந்து உடனடியாக அதற்கான சிகிச்சை பரிந்துரைக்கப்பட்டது. இதனால் தற்போது அக்குழந்தை குணமடைந்தது.

அதேபோன்று மேற்கு திரிபுராவைச் சோ்ந்த 90 வயது மூதாட்டிக்கு இதய செயலிழப்பு நிலை ஏற்பட்டது. அதுவும், உடனடியாக கண்டறியப்பட்டு அவருக்கு தாமதமின்றி சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அடுத்த 10 ஆண்டுகளுக்குள் தொலை நிலை மருத்துவ சேவை நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு சுகாதாரக் கட்டமைப்பு அனைவருக்கும் சென்றடையும் என்ற நம்பிக்கையை இந்த சம்பவங்கள் விதைத்துள்ளன என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT