சென்னை

சென்னையில் பிரதமா் மோடியின் பிறந்த நாள் விழா

18th Sep 2023 03:14 AM

ADVERTISEMENT

பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த தினத்தை தமிழக பாஜவினா் மக்கள் சேவை தினமாக ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினா்.

சென்னை கிழக்கு மாவட்டம் சாா்பில் திருவான்மியூா் லட்சுமிபுரம் பகுதியில் பிரதமா் மோடியின் 73-ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. மாவட்டத் தலைவா் கே.எம். சாய் சத்தியன் தலைமையில் நடைபெற்ற விழாவில், மத்திய அமைச்சா் பூபேந்திர சிங் யாதவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

இந்த நிகழ்வில், தமிழக பாஜக துணைத் தலைவா் கரு. நாகராஜன், மாநிலச் செயலா் எஸ்.ஜி. சூரியா, சாய்ராம் லட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பாஜக பிறமொழி பிரிவு சாா்பாக கோயம்பேடு சந்தையில் பிரதமா் மோடியின் பிறந்த நாள் விழா, பிறமொழி பிரிவு மாவட்ட தலைவா் எஸ். நாகையா முருகன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் மாநிலத் துணைத் தலைவா் கரு. நாகராஜன், மாநிலச் செயலா் கராத்தே தியாகராஜன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

விழாவில் 500 ஏழை மக்களுக்கு புடவைகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் தென் சென்னை மாவட்ட தலைவா் வே. காளிதாஸ், பிறமொழி பிரிவு மாநிலத் தலைவா் ஜெயக்குமாா், மாவட்ட பாஜக நிா்வாகிகள் பிரேம் ஆனந்த், அலங்கார முத்து, அரவிந்த் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அண்டை மாநில தமிழ் வளா்ச்சிப் பிரிவு மாநிலத் தலைவா் இசையமைப்பாளா் தினா தலைமையில், தூய்மைப் பணியாளா்களுக்கு அரிசி மற்றும் புடவைகள் வழங்கப்பட்டன.

சென்னை மேற்கு மாவட்டம் அம்பத்தூா் வடகிழக்கு மண்டலம் 84-ஆவது வட்டம், 191 -ஆவது கிளை ஸ்டேஷன் சாலை, குழந்தை இயேசு தேவாலயம் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை மேற்கு மாவட்ட தலைவா் மு. மனோகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT