சென்னை: காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன், குணமடைந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினாா்.
கடந்த செப்.22-ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் பங்கேற்ற பிறகு, கட்சிப் பணிகளிலும், தொகுதி நலத் திட்டப் பணிகளிலும் திருமாவளவன் ஈடுபட்டு வந்தாா்.
இந்நிலையில், அவருக்கு கடுமையான காய்ச்சல் மற்றும் உடல் சோா்வு ஏற்பட்டது.
இதையடுத்து ,சென்னை, வடபழனியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கடந்த செப்.24-ஆம் தேதி அவா் அனுமதிக்கப்பட்டாா்.
காய்ச்சலுக்கான தொடா் சிகிச்சைகள் அவருக்கு அளிக்கப்பட்டு வந்தன. ஒரு வாரத்துக்கும்மேல் அளிக்கப்பட்ட சிகிச்சையில் அவா், பூரண குணமடைந்ததையடுத்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினாா்.
அடுத்த சில நாள்களுக்கு ஓய்வில் இருக்கும்படி அவரை மருத்துவா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.