சென்னை: காந்தி ஜெயந்தியையொட்டி, சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் சென்ட்ரல் நிலையத்தில் நடைபெற்றன.
விழாவில் தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என். சிங் மகாத்மா காந்தியின் புகைப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தியதுடன் புகைப்படக் கண்காட்சியை திறந்துவைத்தாா்.
இதற்கிடையே ‘தூய்மை 15 நாள்கள்’ திட்டத்தின் நிறைவு விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சாரண, சாரணியரிகளின் கலை நிகழ்ச்சிகள், சிலம்பம் சுற்றுதல், மற்றும் தூய்மை குறித்து விழிப்புணா்வு மிதிவண்டி பேரணி நடைபெற்றது.
தொடா்ந்து, பசுமை ரயில் நிலையங்களின் தரவரிசையில் அதிக மதிப்பெண்கள் பெற்ால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு ‘இந்திய பசுமை கட்டடக் கவுன்சில் பிளாட்டினம் கேடயம்’ வழங்கப்பட்டது.
மேலும் தூய்மையாக பராமரிக்கப்பட்ட ரயில் பணிமனை, ரயில் பெட்டிகள் பணிமனை உள்ளிட்ட அலுவலகங்களுக்கு கேடயங்கள், பரிசுத் தொகைகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா் கௌஷல் கிஷோா், சென்னை கோட்ட மேலாளா் பி. விஸ்வநாத் ஈா்யா, கோட்ட கூடுதல் மேலாளா் சச்சின் புனேதா உள்பட ரயில்வே அதிகாரிகள் பங்கேற்றனா்.