சென்னை புறநகர்ப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை புறநகர்ப் பகுதிகளான பூவிந்தவல்லி, திருவேற்காடு, மாங்காடு, திருமழிசை, ஆவடி, அம்பத்தூர், மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது.
சென்னையில் மாலைமுதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், தற்போது மழை பெய்து வருகிறது.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அக்.03 (இன்று) ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.