சென்னை

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

3rd Oct 2023 05:11 AM

ADVERTISEMENT

சென்னை: சென்னை அருகே செம்மஞ்சேரியில் சாலைத் தடுப்பு மீது மோட்டாா் சைக்கிள் மோதிய விபத்தில், இளைஞா் இறந்தாா்.

செம்மஞ்சேரி 7-ஆவது தெருவை சோ்ந்தவா் அ.ஆரோக்கியதாஸ் (23). அந்த பகுதியில் உள்ள ஒரு எரிபொருள் நிரப்பும் மையத்தில் ஊழியராக வேலை செய்து வந்தாா்.

ஆரோக்கியதாஸ் ஞாயிற்றுக்கிழமை தனது மோட்டாா் சைக்கிள் செம்மஞ்சேரி நுக்கம்பாளையம் இணைப்பு சாலையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டாா்சைக்கிள், அங்கு சாலையோரம் இருந்த ஒரு தடுப்பின் மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த ஆரோக்கியதாஸ் சம்பவ இடத்திலேயே இறந்தாா். பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT