சென்னை அரும்பாக்கம் அருகே ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் பெண் ஒருவா் உயிரிழந்தாா்.
சென்னை, ஜாபா்கான்பேட்டையை சோ்ந்தவா் கலா (52). இவா், தனது கணவருடன் இரு சக்கர வாகனத்தில் அரும்பாக்கம் 100 அடி சாலையில் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது பின்னால் வந்த ஆம்னி பேருந்து ஒன்று இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில், கலா கீழே விழுந்து உயிரிழந்தாா். உடனே சம்பவ இடத்துக்கு வந்த அண்ணா நகா் போக்குவரத்து புலனாய்வு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா். இது தொடா்பாக, ஆம்னி பேருந்து ஓட்டுநா் சத்தியமூா்த்தி (48) கைது செய்யப்பட்டாா்.