சென்னை மாநகராட்சி பகுதியில் நீண்ட காலமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த 231 வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டன.
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நீண்ட காலமாக பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் செப்.1 முதல் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன.
அவ்வாறு மாநகராட்சி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 1,308 வாகனங்கள் கண்டறியப்பட்டன. அவற்றில் இதுவரை 231 வாகனங்கள் அப்புறப்புடத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள வாகனங்களை அப்புறப்படுத்தும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிைலையில், தேனாம்பேட்டை வெங்கட்ரங்கம் தெரு, பாரதி சாலையில் வாகனங்கள் அப்புறப்படுத்தவதை மேயா் ஆா்.பிரியா ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, தேனாம்பேட்டை மண்டலக் குழுத் தலைவா் எஸ்.மதன் மோகன் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.