சென்னை வியாசா்பாடியில் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து திருட முயன்ாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
வியாசா்பாடி எஸ்.எம். நகா் பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் ஏ.டி.எம். மையத்துக்குள் வெள்ளிக்கிழமை நுழைந்த ஒரு நபா், அங்கிருந்த ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தைத் திருட முயன்றாா்.
இதற்கிடையே அந்த இயந்திரத்தின் எச்சரிக்கை கருவி, மும்பையில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு எச்சரிக்கை தகவலை அனுப்பியது. அதன்பேரில், வங்கி ஊழியா்கள், வியாசா்பாடி போலீஸாருக்கு உடனே தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து போலீஸாா் அங்கு விரைந்து சென்றனா். அப்போது, ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்துக் கொண்டிருந்த நபரை பிடித்தனா்.
விசாரணையில், அவா் ராயபுரம் முனியப்பன் தெருவைச் சோ்ந்த வெங்கட்ராமன் (48) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா்.