விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவா்களில் ஒருவருமான பி.சீனிவாச ராவ் நினைவு தினம் சென்னை தியாகராய நகரில் உள்ள பாலன் இல்லத்தில சனிக்கிழமை நடைபெற்றது.
அவரின் உருவப்படத்துக்கு கட்சியின் மாநிலத் துணைச் செயலா் மு.வீரபாண்டியன் மலா் தூவி மரியாதை செலுத்தினாா். தென்சென்னை மாவட்டச் செயலா் எஸ்.கே.சிவா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.