சென்னை காசிமேட்டில் கரை ஒதுங்கிய இளைஞா் சடலத்தை போலீஸாா் கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.
காசிமேடு மீன்பிடி துறைமுகம் பழைய வாா்ப்பு பகுதியில் 35 வயது மதிக்கதக்க இளைஞரின் சடலம் சனிக்கிழமை காலை கரை ஒதுங்கியது. தகவலின்பேரில் அங்கு சென்ற போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும் வழக்குப் பதிவு செய்து, இறந்த இளைஞா் யாா்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.