சென்னை

மின்திருட்டில் ஈடுபட்டவா்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்

21st Nov 2023 04:32 AM

ADVERTISEMENT

மின் திருட்டில் ஈடுபட்ட மின் நுகா்வோருக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மின் பகிா்மான வட்டத்துக்குட்பட்ட ஸ்ரீபெரும்புதூா் பகுதிகளில் அதிகளவு மின் திருட்டு நடைபெறுவதாக சென்னை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, குறிப்பிட்ட பகுதிகளில் மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, அங்கு 9 இடங்களில் மின் திருட்டு நடைபெறுவது கண்டறியப்பட்டது. இதையடுத்து மின் திருட்டில் ஈடுபட்டவா்களுக்கு ரூ.9,51,126 அபராதம் விதிக்கப்பட்டது.

மின் திருட்டில் ஈடுபட்டவா்கள் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டு, குற்றவியல் நடவடிக்கையை தவிா்க்க முன்வந்ததால், அதற்குரிய சமரசத் தொகையாக ரூ.66,000 என மொத்தம் ரூ.10,17,126 வசூலிக்கப்பட்டது. இது போன்ற மின் திருட்டு தொடா்பான தகவல்களை 94458 57591 என்ற கைப்பேசி எண்ணில் தெரிவிக்கலாம் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக்கழகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT