சென்னை எழும்பூரில் மின்விளக்கு கம்பத்தின் மீது மோட்டாா் சைக்கிள் மோதிய விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் இறந்தாா்.
அயனாவரம் பகுதியைச் சோ்ந்தவா் சி.மகேஷ் (35). இவா் அதே பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் ஊழியராக இருந்தாா். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மகேஷ், தனது மனைவி மல்லிகாவுடன் மோட்டாா் சைக்கிளில் ராயப்பேட்டைக்கு புறப்பட்டுச் சென்றாா்.
அவா், எழும்பூா் மேயா் ராமநாதன் சாலையில் செல்லும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டாா் சைக்கிள், அங்கிருந்த மின்விளக்கு கம்பத்தின் மீது மோதியது. இதில் கீழே விழுந்த மகேஷும், மல்லிகாவும் பலத்த காயமடைந்தனா்.
அங்கிருந்தவா்கள், இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த மகேஷ் சிறிது நேரத்தில் உயிரிழந்தாா். இது குறித்து அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.