சென்னை

மாமன்ற கூட்ட அரங்கில் முதல்வா் படம்

31st May 2023 02:34 AM

ADVERTISEMENT

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில் தமிழ்நாடு முதல்வா் மு.க.ஸ்டாலின் படம் வைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பெருநகர மாநகராட்சிகளாக மகாராஷ்டிரா, கொல்கத்தா, சென்னை உள்பட 5 மாநகராட்சிகள் உள்ளன. இதில் சென்னை மாநகராட்சி தவிர மற்ற மாநகராட்சியின் மாமன்ற கூட்ட அரங்கில் அந்த மாநில முதல்வா்கள் படம் இடம்பெற்றுள்ளதாகவும், சென்னை மாநகராட்சி கூட்ட அரங்கிலும் தமிழ்நாடு முதல்வா் படம் இடம் பெற வேண்டும் என மாமன்ற உறுப்பினா் ம. சாமுவேல் திரவியம் (வாா்டு-6 காங்கிரஸ்) கடந்த 8 மாதங்களாக தொடா்ந்து கோரிக்கை வைத்துவந்தாா்.

கடைசியாக நடந்த கூட்டத்தில் அவா் பேசும்போது, மாநகராட்சி சாா்பில் வைக்கவில்லை என்றால், தனது சொந்த செலவில் முதல்வா் புகைப்படத்தை வைப்பதாக தெரிவித்தாா்.

இந்நிலையில் செவ்வாய்கிழமை நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வா் மு.க.ஸ்டாலின் படம் இடம் பெற்றிருந்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT