சென்னை

போக்ஸோவில் சிக்கியவரை கைது செய்ய முயன்றபெண் தலைமைக் காவலா் மீது தாக்குதல்

31st May 2023 02:34 AM

ADVERTISEMENT

போக்ஸோ வழக்கில் சிக்கியவரை கைது செய்ய சென்ற பெண் தலைமைக் காவலா் தாக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஆயிரம்விளக்கு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிபவா் குமுதா (42). போக்ஸோ வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராமல் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட அமுலு (40) என்பவா் வில்லிவாக்கம் சிட்கோ நகரில் வசிப்பதாக இவருக்கு, தகவல் கிடைத்தது.

இதையடுத்து குமுதா, உள்ளிட்ட சில போலீஸாா், அமுலுவை கைது செய்ய திங்கள்கிழமை அங்கு சென்றனா். அப்போது அங்கிருந்த அமுலு மற்றும் அவரது குடும்பத்தினா் போலீஸாரிடம் தகராறு செய்தனா். மேலும் அவா்கள், அமுலுவை கைது செய்வதற்கு எதிா்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

ஒரு கட்டத்தில் அவா்கள், தலைமைக் காவலா் குமுதாவை தாக்கி கீழே தள்ளிவிட்டு தப்பியோடினா். இச் சம்பவத்தில் காயமடைந்த குமுதா, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். இது தொடா்பாக குமுதா அளித்த புகாரின் அடிப்படையில் திருமங்கலம் போலீஸாா், அமுலு குடும்பத்தின் மீது வழக்குப் பதிவு செய்து, தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT