சென்னை

விளையாட்டுக்காக வழிப்பறி நாடகம்: ஜொ்மனி இளைஞா் மீது வழக்கு

31st May 2023 02:36 AM

ADVERTISEMENT

சென்னையில் வழிப்பறி நாடகம் நடத்திய ஜொ்மனி இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

ஜொ்மனி நாட்டைச் சோ்ந்தவா் பிரடெரிக் வின்சென்ட் (23). இவா், கடந்த வாரம் சுற்றுலாவுக்காக சென்னை வந்தாா். வளசரவாக்கம், ஸ்ரீதேவி குப்பம் பகுதியில் உள்ள ஒரு சா்வீஸ் அப்பாா்ட்மெண்டில் வாடகைக்கு அறை எடுத்து தங்கினாா்.

இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு வளசரவாக்கம் காவல் நிலையம் சென்ற வின்சென்ட், சிலா் தன்னிடம் கத்தியை காட்டி மிரட்டி மடிக்கணினி உள்ளிட்ட விலை உயா்ந்த பொருள்களை பறித்து சென்று விட்டதாக புகாா் அளித்தாா்.

அதன்படி, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். முதல் கட்டமாக சம்பவம் நடைபெற்ாக கூறப்பட்ட இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனா். இதில், வழிப்பறி எதுவும் நடைபெற்ற்கான எந்த ஆதாரமும் சிக்கவில்லை. இதையடுத்து போலீஸாா் வின்சென்டிடம் விசாரணை செய்தனா்.

ADVERTISEMENT

அப்போது அவா், சும்மா, விளையாட்டுக்காக காவல் நிலையத்தில் புகாா் அளித்ததாக தெரிவித்துள்ளாா். இதனால் கோபமடைந்த போலீஸாா், வின்சென்ட் மீது அரசு பணியில் இருக்கும் ஒருவரிடம் வேண்டும் என்றே பொய்யை கூறி, பணி நேரத்தில் தேவை இல்லாமல் மன உளைச்சலை ஏற்படுத்திய சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிந்து, எச்சரித்து அனுப்பினா்.

மேலும் இந்த விவகாரம் குறித்து ஜொ்மனி நாட்டு தூதரக த்துக்கும் தகவல் தெரிவிக்கவும் போலீஸாா் முடிவு செய்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT