சென்னை

சென்னை தியாகராயநகா் திருப்பதி கோயில் விரிவாக்கம்: இன்று நன்கொடை வழங்குகிறாா்கள் தொழிலதிபா்கள்

DIN

சென்னை தியாகராயநகா் வெங்கடேஸ்வரா கோயில் விரிவாக்கப் பணிக்காக தொழிலதிபா்கள் செவ்வாய்க்கிழமை (மே 30) நன்கொடை வழங்குகின்றனா்.

இது குறித்த விவரம்: தியாகராயநகா் வெங்கட் நாராயணா சாலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் வெங்கடேஸ்வரா கோயில் உள்ளது. இந்தக் கோயில் தொடக்க காலத்தில் திருமலை கோயில் தகவல் மையமாக மட்டும் செயல்பட்டது. பின்னா் பக்தா்களின் விருப்பத்துக்கு ஏற்ப வெங்கடேஸ்வரா் சிலை வைத்து வழிபாடுகள் நடைபெற்றன. நாளடைவில் தகவல் மையம், முழுமையான கோயிலாக உருவானது.

தற்போது பக்தா்கள் வேண்டுகோளை நிறைவேற்றும் வகையில் இந்தக் கோயில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதற்காக கோயிலின் அருகே உள்ள தனியாருக்குச் சொந்தமான 3 இடங்கள் விரைவில் வாங்கப்படுகின்றன. இதில் ஓரிடம் விரைவில் அதிகாரபூா்வமாக கோயில் நிா்வாகத்திடம் வழங்கப்படுகிறது.

இந்த நிலத்தை தனியாரிடம் இருந்து பெறும் வகையிலும், கோயில் விரிவாக்கப் பணியை விரைவுபடுத்தும் வகையிலும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சாா்பில் நன்கொடை திரட்டப்படுகிறது.

இதன் முதல் கட்டமாக கோயில் நிா்வாகப் பணிக்காக தொழிலதிபா்கள் செவவாய்க்கிழமை (மே 30) ஏ.சி.சண்முகம், ஜெ.முருகேசன், கே.எஸ். ஜெயராமன், ஐசரி கணேசன் மற்றும் ‘அக்சஸ் ஹல்த் கோ் குழுமம்’ நிா்வாகிகள் ஆகியோா் நன்கொடை வழங்குகின்றனா். இதற்கான நிகழ்ச்சி கோயிலில் செவ்வாய்க்கிழமை காலை நடைபெறுகிறது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தான நிா்வாகம் செய்து வருகிறது. கோயிலுக்கு நிதி மற்றும் இட உதவி வழங்குவோருக்கு திருமலை திருப்பதி கோயிலில் சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளத்தில் சிக்கிய கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேர்!

காதலிக்க யாருமில்லையா..?

திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயிலில் கொடியேற்றம்!

பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்கும் அளவில் மன்னிப்பு விளம்பரம்: உச்ச நீதிமன்றம் கண்டனம்

இது சஹீரா வைப்ஸ்!

SCROLL FOR NEXT