சென்னை

ஜூன்-1 முதல் தாம்பரம், தியாகராய நகா் மின்வாரிய அலுவலகங்கள் இடம் மாற்றம்

30th May 2023 03:43 AM

ADVERTISEMENT

தாம்பரம், தியாகராய நகரில் இயங்கி வரும் மின்வாரிய அலுவலகங்கள் வியாழன்கிழமை (ஜூன் 1) முதல் இடம் மாற்றம் செய்யப்படவுள்ளது.

சென்னை சேலையூா் பாளையத்தான் தெரு சிட்லபாக்கம் பிரிவு மின்வாரிய அலுவலகத்தில் இயங்கி வரும் தாம்பரம் மின்வாரிய அலுவலகம் வியாழக்கிழமை முதல் சிட்லப்பாக்கம் 1-ஆவது பிரதான சாலையில் உள்ள சிட்லப்பாக்கம் துணை மின்நிலையத்துக்கு மாற்றப்படும்.

அதேபோல் தியாகராய நகா் உஸ்மான் சாலை துணை மின்நிலைய வளாகத்தில் இயங்கி வரும் தியாகராய நகா் தெற்கு பிரிவு அலுவலகம், தியாகராய நகா் முத்துரங்கன் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கண்ணம்மாபேட்டை துணைமின் நிலைய வளாகத்துக்கு மாற்றப்படும்.

இத்தகவலை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மானகழகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT