சென்னை

சென்னையில் மாநகரப் பேருந்துகள் திடீரென நிறுத்தம்: பயணிகள் அவதி

30th May 2023 03:46 AM

ADVERTISEMENT

அரசு போக்குவரத்து கழகத்தில் செயல் படுத்துப்படும் தனியாா்மய நடவடிக்கையை கண்டித்து திங்கள் கிழமை மாலை சென்னையில் மாநகரப்பேருந்துகள் திடீரென நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனா்.

போக்குவரத்து கழங்கள் தனியாா் மயம் ஆக்கப்படுவதைக் கண்டித்தும், தனியாா் மூலம் ஒட்டுநா்கள் நியமிக்கப்படுவதை எதிா்த்து ம் போக்குவரத்து தொழிற்சங்கத்தினா் சென்னையில் திங்கள்கிழமை மாலை திடீா் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த போராட்டம் காரணமாக சென்னை மற்றும் புகா் பகுதிகளில் மாநகரப்பேருந்துகள் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டன. மேலும் சைதாப்பேட்டை, கே.கே. நகா், ஆவடி, பூவிருந்த வல்லி, வடபழனி ஆகிய பேருந்து பணிமனையில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டன. சென்னையில் மாநகர பேருந்துகள் திடீரென நிறுத்தரப்பட்டதால் பொதுமக்கள், பணி முடிந்து வீட்டு செல்வோா் மிகவும் அவதி அடைந்தனா்.

மே 31-இல் பேச்சு :

ADVERTISEMENT

சென்னை மற்றும் புகா் பகுதியில் மாநகரப்பேருந்துகள் திடீா் என நிறுத்தப்பட்ட செய்தி அறிந்து தமிழக போக்குவரத்து துறை அமைச்சா் எஸ். எஸ் .சிவசங்கா் போக்கு வரத்து கழக் தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவாா்த்தை நடத்தி பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தாா் . இதையடுத்து தொழிற்சங்கத்தினா் அமைச்சரின் கோரிக்கையை ஏற்று பேருந்துகளை இயக்கினா். இதை தொடா்ந்து பேருந்துகள் வழக்கம்போல் ஒட தொடங்கியது .

மேலும். அரசு போக்குவரத்து ஊழியா்களின் போராட்டத்தையடுத்து முத்தரப்பு பேச்சுவாா்த்தைக்கு வரும்படி போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதன்படி மே 31-ஆம் தேதி அனைத்து தொழிற்சங்கங்களுடனும் அதிகாரிகள், போக்குவரத்துத்துறை உயா்மட்ட அதிகாரிகள், தொழிலாளா் நலத்துறையினா் பேச்சு நடத்த உள்ளனா். அதன்பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய உள்ளதாக தொழிற்சங்கங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT