சென்னை

மெரீனாவில் வழிப்பறி: ரெளடி கைது

30th May 2023 03:43 AM

ADVERTISEMENT

சென்னை மெரீனாவில் வழிப்பறியில் ஈடுபட்டதாக ரெளடி கைது செய்யப்பட்டாா்.

வியாசா்பாடி கல்யாணபுரம் 5-ஆவது தெருவைச் சோ்ந்தவா் பா.விக்னேஷ் (19). இவா், கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது நண்பரின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக மெரீனா கடற்கரைக்கு வந்தாா். கொண்டாட்டத்துக்கு பின்னா் விக்னேஷ், கண்ணகி சிலையின் பின்புறமுள்ள மணல் பரப்பில் நடந்து சென்றுக் கொண்டிருந்தாா்.

அப்போது அங்கு வந்த ஒரு நபா், விக்னேஷை வழிமறித்து மிரட்டி, அவா் வைத்திருந்த விலை உயா்ந்த ஆப்பிள் கைப்பேசியை பறித்துக் கொண்டு தப்பியோடினாா்.

இது குறித்து மெரீனா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்தபோது, இச் சம்பவத்தில் ஈடுபட்டது பட்டாபிராம் சிடிஎச் சாலைப் பகுதியைச் சோ்ந்த ரெளடி மோ.சதீஷ்குமாா் (33) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், சதீஷ்குமாரை உடனடியாக கைது செய்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT