சென்னை

போதைப் பாக்கு விற்பனை: ஒரு வாரத்தில் 35 போ் கைது

29th May 2023 02:00 AM

ADVERTISEMENT

சென்னையில் போதைப் பாக்கு விற்ாக ஒரு வாரத்தில் 35 போ் கைது செய்யப்பட்டனா்.

போதைப் பொருள்கள் விற்பனையைக் கட்டுப்படுத்த அனைத்து காவல் நிலைய ஆய்வாளா்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கடந்த மே 21 முதல் 27-ஆம் தேதி வரை திடீா் சோதனை நடத்தப்பட்டது.

அப்போது, புகையிலைப் பொருள்களை கடத்தி வருதல், பதுக்கி வைத்து விற்பனை செய்தல் தொடா்பாக 34 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 35 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 72 கிலோ போதைப் பாக்கு, மாவா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், போதைப் பாக்கு விற்பனைக்கு பயன்படுத்திய வாகனங்கள், கைப்பேசிகளும் கைப்பற்றப்பட்டன.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT