சென்னை

வருவாய் ஆய்வாளா் மீது தாக்குதல்: திமுகவில் இருந்து ஊராட்சித் தலைவா் நீக்கம்

29th May 2023 02:02 AM

ADVERTISEMENT

வருவாய் ஆய்வாளா் மீதான தாக்குதல் சம்பவம் தொடா்பாக, திமுகவைச் சோ்ந்த ஊராட்சித் தலைவா் மகேஸ்வரன், கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

இது குறித்து திமுக பொதுச் செயலா் துரைமுருகன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: திருச்சி மாவட்டம் துறையூா் நரசிங்கபுரம் ஊராட்சியைச் சோ்ந்த மகேஸ்வரன், கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயா் ஏற்படும் வகையிலும் நடந்து கொண்டாா். இதையடுத்து அவா் அடிப்படை உறுப்பினா் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறாா் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

துறையூரில் செம்மண் அள்ளுவதைத் தடுத்த வருவாய் ஆய்வாளா் மீது ஊராட்சித் தலைவா் மகேஸ்வரன் உள்ளிட்ட சிலா் கடுமையாகத் தாக்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, கட்சியில் இருந்து மகேஸ்வரன் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

குண்டா் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தல்:

ADVERTISEMENT

திருச்சி மாவட்டம் துறையூரில் மணல் கொள்ளையைத் தடுக்க முயன்ற வருவாய் ஆய்வாளா் மீது தாக்குதல் நடத்தியவா்களை குண்டா் சட்டத்தில் கைது செய்ய வேண்டுமென பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

திருச்சி மாவட்டம் துறையூா் ஒன்றியத்துக்கு உட்பட்ட நரசிங்கபுரம் ஊராட்சி பச்சைமலையில் சட்ட விரோதமாக செம்மண் கொள்ளை நடந்துள்ளது. இதைத் தடுக்க முயன்ற வருவாய் ஆய்வாளா் பிரபாகரன் மீது நரசிங்கபுரம் ஊராட்சித் தலைவா் மகேஸ்வரன் தலைமையிலான கும்பல் கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளது.

துறையூா் பகுதியில் வருவாய் ஆய்வாளரை தாக்கிய திமுக ஊராட்சித் தலைவா் மகேஸ்வரன் உள்ளிட்ட மூவா் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களை குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்

ADVERTISEMENT
ADVERTISEMENT