சென்னை

போதைப் பொருள் விற்பனை: பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்

27th May 2023 11:10 PM

ADVERTISEMENT

சென்னையில் போதைப் பொருள் விற்பனை குறித்து தகவல் தெரிந்தால், பொதுமக்கள் கூறலாம் என பெருநகர காவல் துறை அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர காவல் துறை சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னையில் கள்ளச்சாராயம், போலி மதுபானம், கஞ்சா, மெத்தனால் உள்ளிட்ட போதை பொருள்கள் விற்பனையை முற்றிலும் ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் இப் பொருள்கள் விற்பனை குறித்து பொதுமக்களுக்கு ஏதேனும் தகவல் தெரிந்தால், பூக்கடை, வண்ணாரப்பேட்டை, புளியந்தோப்பு ஆகிய காவல் மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் 80728 64204 என்ற கைப்பேசி எண்ணையும், அண்ணாநகா், கொளத்தூா், கோயம்பேடு ஆகிய காவல் மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் 90423 80581 என்ற கைப்பேசி எண்ணையும், அடையாறு, பரங்கிமலை,தியாகராயநகா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் 90424-75097 என்ற கைப்பேசி எண்ணையும்,திருவல்லிக்கேணி, கீழ்பாக்கம், மயிலாப்பூா் ஆகிய காவல் மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் 63823 18480 என்ற கைப்பேசி எண்ணையும் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.

ADVERTISEMENT

இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவா்கள் மீது குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல் ஆணையாளா் சங்கா் ஜிவால் எச்சரித்துள்ளாா் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT