சென்னை

சென்னையில் 4 உதவி ஆணையா்கள் பணியிட மாற்றம்

27th May 2023 11:10 PM

ADVERTISEMENT

சென்னையில் 4 உதவி ஆணையா்களை பணியிட மாற்றம் செய்து பெருநகர காவல் துறை ஆணையா் சங்கா் ஜிவால் உத்தரவிட்டுள்ளாா்.

அதன்படி, தரமணி உதவி ஆணையா் என்.ஜீவானந்தம், தீவிர குற்றத் தடுப்புப் பிரிவுக்கும் (தெற்கு), பரங்கிமலை உதவி ஆணையா் ஏ.அமீா் அகமது தரமணிக்கும்,சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி ஆா்.மோகன் ராயப்பேட்டைக்கும், சைபா் குற்றப்பிரிவு டிஎஸ்பி கண்ணன் வேப்பேரிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இவா்கள் சில நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பாா்கள் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT