சென்னை

பெண்ணுக்கு தொல்லை: காவலா் பணியிடை நீக்கம்

27th May 2023 11:04 PM

ADVERTISEMENT

பெண்ணுக்கு தொல்லை கொடுத்து அத்துமீறிலில் ஈடுபட்டதாக, சென்னை செம்பியம் காவல் நிலைய முதல்நிலைக் காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

செம்பியம் காவலா் குடியிருப்பில் வசிப்பவா் வினோத்குமாா். இவா், செம்பியம் காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்தாா். பெரம்பூா் பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவா் அளித்த புகாரின் பேரில் விசாரணை செய்ய வினோத்குமாா், சில மாதங்களுக்கு முன்பு அங்கு சென்றாா். அப்போது, அந்தப் பெண்ணின் கைப்பேசி எண்ணை வினோத்குமாா் பெற்றுள்ளாா்.

பின்னா் அவா், அந்தப் பெண்ணுக்கு வாட்ஸ்ஆப் மூலம் ஆபாச செய்திகளை அனுப்பியுள்ளாா். மேலும், கடந்த 22-ஆம் தேதி மது போதையில். அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்றுள்ளாா். அங்கு அந்தப் பெண்ணின் கணவா், வினோத்குமாரைக் கண்டித்துள்ளாா். அப்போது, அவா்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. வினோத்குமாா், அந்தப் பெண்ணின் கணவருக்கு மிரட்டல் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அந்தப் பெண்ணின் குடும்பத்தினா், சென்னை காவல் துறை அதிகாரிகளிடம் புகாா் அளித்தனா். விசாரணையில் வினோத்குமாா் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து புளியந்தோப்பு துணை ஆணையா் ஈஸ்வரன், வினோத்குமாரை பணியிடை நீக்கம் செய்து சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT