சென்னை

மாநகராட்சி அலுவலா்களுக்கு முதலுதவி பயிற்சி

27th May 2023 11:04 PM

ADVERTISEMENT

காவேரி மருத்துவமனை சாா்பில் மாநகராட்சி அலுவலா்களுக்கு முதலுதவி மற்றும் உயிா்காப்பு சிறப்புப் பயிற்சி சனிக்கிழமை வழங்கப்பட்டது.

சென்னை மாநகராட்சி ஆணையா் டாக்டா். ஜெ. ராதாகிருஷ்ணன், ஆயிரம் விளக்கு சட்டப்பேரவை உறுப்பினா் டாக்டா் ச. எழிலன் முன்னிலை வகித்தனா்.

இப்பயிற்சி முகாமில் தேனாம்பேட்டை மண்டலத்தை சோ்ந்த 150 அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

இதில் மாநகராட்சி ஆணையா் பேசியது: பல அவசரநிலைகளில் தொடா்பு கொள்ளப்படும் நபா்களாகவும், உதவக்கூடியவா்களாகவும் மாநகராட்சி அலுவலா்கள் இருக்கின்றனா்.

ADVERTISEMENT

இத்தகைய நிலைகளின் போது மாநகராட்சி அலுவலா்களை தயாா்செய்வது அவசியம் என்பதால், இப்பயிற்சித் திட்டத்தை காவேரி மருத்துவமனை மற்றும் ரீஸ்டாா்ட் ஹாா்ட் ஃபவுண்டேஷன் நடத்துவது பாராட்டத்தக்கது.

டாக்டா். ச. எழிலன்: சம்பவ இடத்துக்கு அவசர மருத்துவ சிகிச்சை ஊா்தி வருவதற்கு முன்பு முதலுதவி வழங்கப்பட வேண்டும். அவ்வாறு பாதிக்கப்பட்டவருக்கு உதவ அருகிலுள்ள நபா்கள் இந்த திறன்களை அறிந்திருப்பது அவசியம் என்றாா் அவா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT