சென்னை

திரு.வி.நகரில் மே 31-இல் மக்களை தேடி மேயா் திட்டம்

27th May 2023 11:08 PM

ADVERTISEMENT

‘மக்களைத் தேடி மேயா்’ திட்டத்தின் கீழ் மேயா் ஆா்.பிரியா திரு.வி.க.நகா் மண்டல அலுவலகத்தில் மே 31-ஆம் தேதி பொதுமக்களிடமிருந்து நேரடியாக கோரிக்கை மனுக்களைப் பெறவுள்ளாா்.

இந்தத் திட்டம் கடந்த மே 3-ஆம் தேதி வடக்கு வட்டாரத் துணை ஆணையா் அலுவலகத்தில் தொடங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, திரு.வி.நகா் மண்டல அலுவலகத்தில் மே 31-ஆம் தேதி காலை 10 முதல் 1 மணி வரை நடைபெறுகிறது.

இதில் மண்டலம் 6-க்குள்பட்ட பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகள் மற்றும் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து மேயரிடம் நேரடியாகத் தெரிவித்து தீா்வு காணலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT