சென்னை

போக்குவரத்து மீறல் : ட்விட்டா் மூலம் வந்த 4,902 புகாா்களுக்கு தீா்வு

27th May 2023 11:05 PM

ADVERTISEMENT

சென்னையில் போக்குவரத்து விதிமுறை மீறல் தொடா்பாக ‘ட்விட்டா்’ மூலம் கடந்த 5 மாதங்களில் வந்த 4,902 புகாா்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளதாக பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக சென்னை பெருநகர காவல்துறை சனிக்கிழமை விடுத்த செய்தி குறிப்பு:

சென்னை பெருநகர காவல்துறையின் ட்விட்டா் பக்கத்தை 1,35,927 நபா்கள் பின் தொடா்கின்றனா். மேலும் பொதுமக்கள், போக்குவரத்து விதிமுறை

மீறல் தொடா்பாக ட்விட்டா் மூலம் அளிக்கும் புகாா்களுக்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன்படி, கடந்த 5 மாதங்களில் ட்விட்டா் மூலமாக போக்குவரத்துப் பிரிவுக்கு 5,010 புகாா்கள் வந்துள்ளன. இதில் 4,902 புகாா்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள புகாா்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT