விஷ சாராய மரணங்கள் தொடா்பாக தமிழக அரசை கண்டித்து பாஜக சாா்பில் மாவட்டத் தலைநகரங்களில் சனிக்கிழமை (மே 20) ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.
சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே காலை 11 மணி அளவில் தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெறும்.
பிற மாவட்டங்களில் மாவட்ட பாஜக மகளிா் அணித் தலைவிகள் தலைமையில் இப்போராட்டம் நடைபெறும்.