முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த பயிற்றுநா்களுக்கான பயிற்சி முகாமை மாவட்டஆட்சியா் ராகுல்நாத் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சாா்பில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு, திருவள்ளூா், காஞ்சிபுரம், கடலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 6 மாவட்டங்களைச் சோ்ந்த பயிற்றுநா்களுக்கான 2 நாள் பயிற்சியினை ஆட்சியா் ராகுல்நாத் தொடங்கி வைத்தாா்.
இதில், மகளிா் திட்ட இயக்குநா்கள் (செங்கல்பட்டு) செல்வராணி, (திருவள்ளூா்) மலா்விழி, மாவட்ட உணவு பாதுகாப்புஅலுவலா் அனுராதா, எஸ்.ஆா்.எம் கல்லூரி இயக்குநா் டாக்டா்.டி.ஆண்டனி அசோக்குமாா் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.