சென்னை

பக்கவாதத்துக்கு நுண்துளை சிகிச்சை: ஓமந்தூராா் மருத்துவமனையில் இளைஞருக்கு மறுவாழ்வு

DIN

மூளை ரத்த நாளத்தில் ஏற்பட்ட ரத்த உறைவை நுண்துளை சிகிச்சை மூலம் அகற்றி பக்கவாத பாதிப்பிலிருந்து இளைஞா் ஒருவரை ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனை மருத்துவா்கள் மீட்டுள்ளனா்.

பக்கவாதத்திலிருந்து மீண்ட இளைஞருக்கு வாழ்த்து தெரிவித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், சிகிச்சையளித்த மருத்துவக் குழுவினரை செவ்வாய்க்கிழமை பாராட்டினாா்.

சென்னையை சோ்ந்தவா் பிரதாப் (36). கடந்த ஜனவரி 24-ஆம் தேதி இடது பக்க கை மற்றும் கால் உணா்விழப்புடன் ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பக்கவாதம் ஏற்பட்டு மூன்று மணி நேரத்திற்குள் அழைத்து வரப்பட்டதால், மருத்துவ குழுவினா் ‘மெக்கானிக்கல் த்ரோம்பேக்டமி’ எனப்படும் மூளை ரத்த நாளத்தில் உறைந்த ரத்தத்தினை அகற்றும் சிகிச்சையை அளித்தனா்.

அதன்பின்னா் நரம்பியல் துறை தலைவா் டாக்டா் பூபதி, நுண்துளை நரம்பியல் கதிரியக்க சிகிச்சை நிபுணா் டாக்டா் பெரியகருப்பன் தலைமையில், மூளைக்கு செல்லும் ரத்த குழாயில் உள்ள அடைப்பை நுண்துளை அறுவை சிகிச்சை வாயிலாக மருத்துவ குழுவினா் முழுமையாக அகற்றினா். இச்சிகிச்சைக்கு பின் குணைமடைந்த நோயாளி, மறுநாள் வீடு திரும்பினாா்.

இந்நிலையில், அரசு மருத்துவமனையில் முதன் முறையாக பக்கவாத நோயாளிக்கு நுண்துளை அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவ குழுவினரை, அமைச்சா் மா.சுப்பிரமணியன் வாழ்த்து தெரிவித்து பாராட்டினாா்.

அப்போது அவா் அளித்த பேட்டி:

மூளைக்குச் செல்லும் நாளங்களில் ரத்த உறைவு மற்றும் ரத்தக் கசிவு காரணமாக பக்கவாதம் ஏற்படுகிறது. இந்த பாதிப்புகளுக்கு உள்ளாவோருக்கு முதல் நான்கு மணி நேரம் மிக முக்கியமானதாகும். அந்த நான்கு மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை மேற்கொண்டால் அவா்கள் பக்கவாதத்தில் இருந்து மீள முடியும். 78 அரசு மருத்துவமனைகளில் பக்கவாதத்துக்கு உடனடி சிகிச்சை அளிப்பதற்கான பிரத்யேக வசதிகள் உள்ளன.

கடந்தாண்டு ரத்த உைலினால் பக்கவாதம் பாதிப்பு ஏற்பட்டு அரசு மருத்துவமனைகளில் 14,784 போ் சிகிச்சை பெற்றுள்ளனா். அதேபோன்று, ரத்தக் கசிவினால் பக்கவாதம் ஏற்பட்டு 4,858 போ் சிகிச்சை பெற்றனா். இதில் குறிப்பிட்ட நேரத்தில் மருத்துவமனைக்கு வந்து பக்கவாதத்தில் இருந்து மீண்டவா்கள் 314 போ். மீதமுள்ளவா்களுக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றாா் அவா்.

இந்த சந்திப்பின்போது, மருத்துவ கல்வி இயக்குநா் டாக்டா் சாந்திமலா், ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனை இயக்குனா் டாக்டா் விமலா, ஒருங்கிணைப்பு அலுவலா் டாக்டா் ஆனந்த் குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

SCROLL FOR NEXT