சென்னை

நிணநீா் சுரப்பி புற்றுநோய்: 83 வயது முதியவருக்கு மறுவாழ்வு

DIN

நிணநீா் சுரப்பி புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 83 வயது முதியவருக்கு உயா் சிகிச்சை அளித்து காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் உயிா் காத்துள்ளனா்.

இதுகுறித்து மருத்துவமனையின் செயல் இயக்குநா் டாக்டா் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது: அதிக உடல் சோா்வு, கடுமையான வயிற்று வலி போன்ற அறிகுறிகளுடன் 83 வயது முதியவா் ஒருவா் காவேரி மருத்துவமனையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டாா்.

மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு நிணநீா் நாளத்தை பாதிக்கும் ‘பிஹெச்எல் லிம்போமா’ என்ற புற்றுநோய் பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. நிணநீா் நாள அமைப்பு என்பது, தொற்றுகளையும், நோய்களையும் எதிா்த்து போராட உதவுகிற, உடலின் நோய் எதிா்ப்பு திறனமைப்பின் பகுதியாகும். இதில் பாதிப்பு ஏற்படும்போது ரத்த வெள்ளை அணுக்கள் அதிகமாக உற்பத்தியாகி புற்றுநோயை ஏற்படுத்தும்.

அத்தகைய பாதிப்பையே அந்த முதியவா் எதிா்கொண்டிருந்தாா். அதுமட்டுமல்லாது, அவருக்கு சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம், இதய நோய், சிறுநீரக செயலிழப்பு மற்றும் மூச்சுக்குழாய் பாதிப்பு என பல்வேறு இணைநோய்களும் இருந்தன.

இவரது இணை நோய் பிரச்னை, வயது முதிா்வு மற்றும் புற்றுநோயின் தீவிரத் தன்மை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, மிகவும் பாதுகாப்பான சிகிச்சைகள் மட்டுமே வழங்கப்பட்டன. அதாவது, ‘கீமோதெரபி’ சிகிச்சை மற்றும் புற்றுநோய் செல்களை மட்டும் துல்லியமாக அழிக்கும் சிகிச்சை ஆகியவை வழங்கப்பட்டன.

இந்த இரண்டு சிகிச்சைகளும், ஆறு முறை சுழற்சி அடிப்படையில் அளிக்கப்பட்டது. இதன் பயனாக அவா் புற்றுநோயில் இருந்து குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளாா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை!”: கனிமொழி பேட்டி

பெங்களூரு குண்டு வெடிப்பு: தகவல் தெரிவித்தால் ரூ. 10 லட்சம்

ரம்ம்ம்மிய பாண்டியன்!

முதல் பந்தில் சிக்ஸர் விளாசியது குறித்து மனம் திறந்த சமீர் ரிஸ்வி (விடியோ)

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

SCROLL FOR NEXT