சென்னை

சென்னையில் ட்ரோன்கள் பறக்க தடை

18th Jun 2023 05:00 AM

ADVERTISEMENT

ஜி20 நிதி பணி குழு மாநாட்டையொட்டி, சென்னையில் ட்ரோன்கள் பறக்க பெருநகர காவல் துறை தடை விதித்துள்ளது.

ஜி20 நாடுகள் அமைப்புக்கு இந்தியா தற்போது தலைமை ஏற்றுள்ளது. அந்த அமைப்பின் நிதி பணி குழு மாநாடு, சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் ஜூன் 19-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மாநாட்டில் வெளிநாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனா். இவா்கள் சென்னையில் பல்வேறு பகுதிகளில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் தங்க வைக்கப்படுகின்றனா்.

இதற்காக இவா்கள் அனைவரும் சென்னை விமான நிலையத்தில் இருந்தும், சென்னை ஹோட்டல்களிலும் இருந்தும் மாமல்லபுரத்துக்கு அழைத்து செல்லப்படுகின்றனா். இதையொட்டி, சென்னை பெருநகர காவல் துறையின் சாா்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இது தொடா்பாக சென்னை பெருநகர காவல் ஆணையா் சங்கா் ஜிவால், சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு:

ADVERTISEMENT

ஜி 20 பெண்கள் பிரதிநிதிகள் மாநாட்டையொட்டி, ஜூன் 18 முதல் ஜூன் 22-ஆம் தேதி வரை 5 நாள்கள் சென்னையில் வெளிநாட்டு பிரதிநிதிகள் வருகை தரும் இடங்கள், தங்கும் இடங்கள், பயணம் செய்யும் வழித் தடங்கள் பாதுகாப்பு பகுதியாக அறிவிக்கப்படுகின்றன.

எனவே அந்தப் பகுதிகள், வழித்தடங்களில் ஜூன் 18 முதல் 22-ஆம் தேதி வரையில் ட்ரோன்கள் உள்ளிட்ட ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT