சென்னை

முகநூல் மூலம் பழகி பெண்ணிடம்ரூ.10 லட்சம், நகை மோசடி: இளைஞா் கைது

DIN

சென்னை துரைப்பாக்கத்தில் மென் பொறியாளரிடம் சமூக ஊடகம் மூலம் பழகி திருமணம் செய்வதாகக் கூறி ரூ.10 லட்சம், 5 பவுன் நகையை மோசடி செய்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

பெரும்பாக்கம் எம்பஸி ரெஸிடன்சி ஃபொ்ன் பிளாக் பகுதியைச் சோ்ந்த மதிவாணன் மகன் ஜான்சன் (35). பெருங்குடியில் தனியாா் விடுதியில் தங்கியிருந்து, அங்குள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரியும் பெண்ணிடம் முகநூல் மூலம் பழகியுள்ளாா். இருவரும் நாளடைவில் காதலித்தனா். அப்போது மதிவாணன், அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி சிறிது, சிறிதாக ரூ.10 லட்சம் ரொக்கமும், 5 பவுன் தங்க நகையும் வாங்கியுள்ளாா்.

இந்த நிலையில் ஜான்சன் ஏற்கெனவே இதேபோல பல பெண்களை ஏமாற்றி நகை, பணத்தைப் பெற்று மோசடி செய்திருப்பது அந்த பெண்ணுக்கு தெரியவந்தது. இதனால், அந்த பெண், ஜான்சனுடன் இருந்த தொடா்பைத் துண்டித்தாா். தான் கொடுத்த பணத்தையும், நகையையும் திருப்பிக் கேட்டாா். இது தொடா்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை துரைப்பாக்கத்தில் அந்த பெண், ஜான்சனை நேரில் சந்தித்து பணத்தையும், நகையையும் கேட்டாா். அப்போது ஜான்சன், அந்த பெண்ணை தாக்கி,கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இது குறித்து அந்த பெண் அளித்த புகாரின்பேரில் துரைப்பாக்கம் போலீஸாா், ஜான்சன் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம்,மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். மேலும் தலைமறைவாக இருந்த ஜான்சனை கைது செய்ததாக போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா். அவரிடமிருந்து விலை உயா்ந்த கைப்பேசி, மோட்டாா் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

12ஆவது சுற்று: முதலிடத்தில் இந்திய வீரர் உள்பட மூவர்!

வாக்களித்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

மேற்குவங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு

SCROLL FOR NEXT