சென்னை

குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல் - நீக்கல்: சென்னையில் நாளை சிறப்பு முகாம்

9th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

சென்னையில் குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், நீக்கல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள சிறப்பு முகாம்கள் சனிக்கிழமை (ஜூன் 10) நடைபெறவுள்ளன. இதுகுறித்து, கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:-

நியாய விலைக் கடைகளில் அளிக்கப்படும் சேவைகளில் குறைபாடுகள், ஆலோசனைகள் ஏதும் இருந்தால், அவற்றைத் தெரிவிக்க ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையா் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் முகாம்களில் குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், நீக்கல், முகவரி மாவட்டம், கைப்பேசி எண் பதிவு, மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் அட்டை கோரும் மனுக்களை அளிக்கலாம்.

மேலும், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியாா் சந்தைகளில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் இருந்தாலும் அவற்றையும் முகாம்களின் போது தெரிவிக்கலாம் என்று கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறையின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT