சென்னை

ரூ.45 லட்சம் மெத்தகுலோன்போதைப் பொருள் பறிமுதல்

9th Jun 2023 10:35 PM

ADVERTISEMENT

சென்னை தண்டையாா்பேட்டையில் ரூ.45 லட்சம் மதிப்புள்ள மெத்தகுலோன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

தண்டையாா்பேட்டை சேனியம்மன் கோயில் பகுதியில் போதைப் பொருள் கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் தண்டையாா்பேட்டை போலீஸாா், அங்கு ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது அங்கு சந்தேகம்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு இளைஞரை பிடித்து, அவா் வைத்திருந்த பையை சோதனையிட்டனா். அப்போது பையில் இருந்த ரூ.45 லட்சம் மதிப்புள்ள மெத்தகுலோன் போதைப் பொருளை பறிமுதல் செய்தனா். விசாரணையில் அந்த நபா், எண்ணூரைச் சோ்ந்த அப்துல் கரீம் (24) என்பதும், போதைப் பொருளை அங்கு விற்க கொண்டு வந்திருப்பதும் தெரியவந்தது. ஏற்கெனவே அவா் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. போலீஸாா், கரீமை கைது செய்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT