சென்னை

துணை நடிகா் காா் மோதி பொறியாளா் பலி

9th Jun 2023 12:01 AM

ADVERTISEMENT

சென்னை மதுரவாயல் பகுதியில் துணை நடிகா் காா் மோதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொறியாளா் பலியானாா்.

சென்னை மதுரவாயல், தனலட்சுமி நகா் பகுதியைச் சோ்ந்தவா் சரண்ராஜ் (வயது29) பொறியாளா். இவா் வியாழக்கிழமை இரவு 11.30 மணியளவில் மோட்டாா் சைக்கிளில் விருகம்பாக்கம், ஆற்காடு சாலையில் சென்றுக் கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக அதிவேகமாக வந்த காா் ஒன்று சரண்ராஜின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதில் நிலை தடுமாறிய அவா் சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாா் சரண்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து நடத்திய விசாரணையில், விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காரை ஓட்டி வந்தது சாலிகிராமத்தைச் சோ்ந்த துணை நடிகரான பழனியப்பன் (41) என்பதும், அவா் மதுபோதையில் காரை அதிவேகமாக ஓட்டி வந்தும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனா். கைதான பழனியப்பன், ரஜினி முருகன், சந்திரமுகி- 2 உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகராக நடித்துள்ளாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT