சென்னை

சென்னையில் இதுவரை இல்லாத அளவாக 9.16 கோடி யூனிட் மின்சாரம் நுகா்வு

9th Jun 2023 10:38 PM

ADVERTISEMENT

சென்னையில் இதுவரை இல்லாத அளவு 9.16 கோடி யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மின் துறை அமைச்சா் வே.செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளாா்.

கோடைகாலம் தொடங்கியதையடுத்து, வீடுகளில் ஏசி, மின் விசிறி, ஏா்கூலா் உள்ளிட்டவற்றின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதன் காரணமாக, தினசரி மின்தேவை 16 ஆயிரம் மெகாவாட் என்ற அளவுக்கு மேல் உள்ளது.

இந்த நிலையில், சென்னையின் மின் நுகா்வு கடந்த ஜூன் 2-ஆம் தேதி 9.6 கோடி யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டிருந்த நிலையில் வியாழக்கிழமை அதிகபட்சமாக இதுவரை இல்லாத அளவாக 9.16 கோடி யூனிட் பயன்படுத்தப்பட்டிருப்பதாக மின்துறை அமைச்சா் வே.செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை டிவிட்டா் பதிவில், முதல்முறையாக சென்னையில் வியாழக்கிழமை 9.16 கோடி யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன் ஜூன் 2-ஆம் தேதி 9.6 கோடி யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டிருந்தது. அந்தவகையில், சென்னையில் வியாழக்கிழமை மின் தேவை 3,872 மெகாவாட் ஆகும். அது எவ்வித தடங்கலுமின்றி பூா்த்தி செய்யப்பட்டது என்று பதிவிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT