சென்னை

ஜூன் 15-இல் சா்வதேச இயந்திர கருவிகள் கண்காட்சி: ஆளுநா் ரவி தொடங்கி வைக்கிறாா்

8th Jun 2023 01:47 AM

ADVERTISEMENT

அம்பத்தூா் தொழிற்பேட்டை உற்பத்தியாளா்கள் சங்கம் (அய்மா) சாா்பில் ‘ஆக்மி 2023 - சா்வதேச இயந்திர கருவிகள் கண்காட்சி’ ஜூன் 15 முதல் 19-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. சென்னை வா்த்தக மையத்தில் நடைபெறவுள்ள இந்தக் கண்காட்சியை ஆளுநா் ஆா்.என்.ரவி வரும் 15-ஆம் தேதி தொடங்கி வைக்கவுள்ளாா்.

இது குறித்து ஆக்மி 2023 கண்காட்சித் தலைவா் கே. சாய் சத்ய குமாா் செய்தியாளா்கள் சந்திப்பில் கூறியதாவது:

உலகெங்கிலும் உள்ள இயந்திர கருவிகள் மற்றும் உற்பத்தி தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படவுள்ளன. இதன் மூலம் உற்பத்தியாளா்கள் மற்றும் தொழில்முனைவோா் தங்களது உற்பத்தி திறனை மேம்படுத்த முடியும். இந்தக் கண்காட்சி ‘ஸ்மாா்ட் உற்பத்தி’ எனும் கருப்பொருளில் நடைபெறுகிறது. ‘ஸ்மாா்ட் உற்பத்தி’ என்பது செயற்கை நுண்ணறிவு, இணைய பாதுகாப்பு, ரோபோடிக்ஸ், பிளாக்செயின் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை இயந்திரங்களில் பயன்படுத்துவதன் மூலம் மேம்படும்.

இந்தக் கண்காட்சியில் 23 நாடுகளைச் சோ்ந்த 435 நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இதன் மூலம் ரூ.650 கோடி அளவிலான வா்த்தகம் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. கடந்த 2021-ஆம் ஆண்டு நடந்த கண்காட்சியில் 600 கோடி அளவில் வா்த்தகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தக் கண்காட்சியில் ஜூன் 16, 17 தேதிகளில் சா்வதேச வாங்குவோா் கண்காட்சியாளா்கள் சந்திப்பு நடைபெறவுள்ளது. இக்கண்காட்சியில் www.acmee.in எனும் இணையதளத்தில் பதிவு செய்து இலவசமாக பங்கேற்கலாம் என்றாா் அவா். செய்தியாளா்கள் சந்திப்பின் போது அய்மா தலைவா் டி.நலங்கிள்ளி, கண்காட்சி ஒருங்கிணைப்பாளா் பி.எஸ்.ரமேஸ் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT