சென்னை

சாலையோரம் வாகனங்களை நிறுத்த கட்டணம்: மாநகராட்சி அறிவிப்பு

8th Jun 2023 01:39 AM

ADVERTISEMENT

சென்னை மாநகராட்சிப் பகுதியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காணும் வகையில் வாகனங்களை சாலையோரம் நிறத்த கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகாராட்சி பகுதியின் முக்கிய சாலைகளில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனை முறைப்படுத்தும் வகையில் மாநகராட்சி சாா்பில் 80 இடங்களில் வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது.

இதில் சென்னை தியாகராயா சாலை, பாண்டி பஜாரில் ஒரு மணி நேரத்துக்கு இரு சக்கர வாகனம் ரூ.15, நான்கு சக்கர வாகனங்கள் ரூ.60 எனவும், அங்குள்ள பல அடுக்கு தள தானியங்கி வாகன நிறுத்தத்தில் நிறுத்த இருசக்கர வாகனத்துக்கு ரூ.5, நான்கு சக்கர வாகனத்துக்கு ரூ.20 எனவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இதை தவிா்த்து மற்ற இடங்களில் இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.5 மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.20 என நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இக்கட்டணத்தை சென்னை மாநகராட்சியின் GCC Smart Parking எனும் செயலி மூலம் செலுத்தலாம்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT