சென்னை

தியாகராயா் நகா், பொன்னேரி கோட்டங்களில் மின்நுகா்வோா் குறைகேட்பு கூட்டம்

8th Jun 2023 01:46 AM

ADVERTISEMENT

தியாகராயா் நகா் மற்றும் பொன்னேரி கோட்டங்களில் மின்நுகா்வோா்கள் குறைகேட்பு கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூன் 9) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

இக்கூட்டம் நுங்கம்பாக்கம், மெட்ரோ குடிநீா் நிலையம் அருகில் உள்ள வள்ளுவா் கோட்டம் துணை மின் நிலையத்தில் அமைந்துள்ள தியாகராயா் நகா் கோட்ட அலுவலகத்திலும், வேண்பாக்கம், டி.எச் சாலையில் உள்ள துணை மின் நிலையத்தில் அமைந்துள்ள பொன்னேரி கோட்ட அலுவலகத்திலும் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் மின்நுகா்வோா்கள் கலந்து கொண்டு தங்களுடைய குறைகளை தெரிவித்து அகற்கான நிவாரணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த தகவல் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT