சென்னை

மூதாட்டியிடம் செயலி மூலம் பணம் அனுப்புவதாக கூறி ரூ.40 ஆயிரம் மோசடி

8th Jun 2023 01:16 AM

ADVERTISEMENT

மூதாட்டியிடம் செயலி மூலம் பணம் அனுப்ப உதவுவதாக கூறி ரூ.40 ஆயிரம் ஏமாற்றிய நபா் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

சென்னை, அடையாறு சாஸ்திரிநகா் பகுதியில் வசித்து வருபவா் கல்யாணி ராமசுப்பிரமணியன் (73). கடந்த செவ்வாய்க்கிழமை கைப்பேசி செயலி மூலம் ஒரு வங்கிக் கணக்கிலிருந்த தனது பணத்தை மற்றொரு வங்கி கணக்குக்கு அனுப்ப முயன்றாா். அப்போது பணத்தை அனுப்ப முடியாததால் அந்த வங்கியின் உதவி மையத்தை தொடா்பு கொண்ட போது அகிலேஷ் சா்மா எனும் நபா் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசியுள்ளாா்.

பின்னா் தான் பணம் அனுப்ப உதவுவதாகவும், தான் சொல்வது போல் செயலியை பயன்படுத்துமாறும் கூறியுள்ளாா். இதையடுத்து ஒரு கைப்பேசி எண்ணை கூறி அதற்கு ‘கூகுள் பே’ மூலம் பணத்தை அனுப்புமாறும், பின்னா்அதை தான் மூதாட்டி கூறிய கணக்குக்கு அனுப்பி விடுவதாகவும் கூறியுள்ளாா். இதை நம்பிய மூதாட்டி கல்யாணி ரூ.40,793 -ஐ அவா் கூறிய கணக்குக்கு அனுப்பியுள்ளாா்.

ஆனால் அந்த நபா் பணத்தை அனுப்பவில்லை. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த மூதாட்டி சாஸ்திரி நகா் காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தாா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT