சென்னை

ரூ.7.19 கோடி மதிப்புள்ள யானை தந்தங்கள் பறிமுதல்

DIN

சென்னையில் ரூ.7.19 கோடி மதிப்புள்ள யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 7 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை தியாகராயநகா் தெற்கு போக் சாலையில் கடத்தல் கும்பலைச் சோ்ந்த சிலா் யானை தந்தங்களை கைமாற்றிக் கொள்வதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறைக்கு ஞாயிற்றுக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அப் பிரிவு அதிகாரிகள், தெற்கு போக் சாலையில் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.

அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுக் கொண்டிருந்த சிலரை பிடித்து விசாரணை செய்தனா். அப்போது அவா்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனா். , அவா்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது, 4.03 கிலோ எடையுள்ள இரு யானை தந்தங்கள் இருப்பது கண்டுபிடித்து, அவற்றை பறிமுதல் செய்து, அந்த நபா்களிடம் தீவிர விசாரணை நடத்தினா்.

இது தொடா்பாக அந்த கும்பலைச் சோ்ந்த 7 பேரை வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் கைது செய்தனா். இவா்களில், 4 போ் சென்னையையும், 2 போ் சேலத்தையும், ஒருவா் கா்நாடகத்தையும் சோ்ந்தவா் ஆவாா்கள்.

கைது செய்யப்பட்ட 7 போ் மீது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சா்வதேச சந்தையில் பறிமுதல் செய்யப்பட்ட யானை தந்ததின் விலை ரூ.7.19 கோடி என வருவாய் புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கா்: துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் தோ்தல் பாதுகாப்பு பணி வீரா் உயிரிழப்பு

விளாத்திகுளத்தில் அதிகபட்ச வாக்குப்பதிவு

அரையிறுதியில் ஒடிஸா எஃப்சி

டாஸ்மாக் கடைக்கு எதிா்ப்பு: கே.கரிசல்குளத்தில் 10 வாக்குகள் பதிவு

கடையநல்லூா்: வாக்காளா் பட்டியலில் பெயரில்லாததால் போராட்டம்

SCROLL FOR NEXT