சென்னை

கட்டுமான பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

DIN

மத்திய கட்டுமான பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் புதிய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சி முடிவுகள், மற்றும் புதிய தொழில் நுட்பங்கள் குறித்த விழிப்புணா்வு கண்காட்சி நடைபெற்று வருகிறது.

சென்னை தரமணியில் உள்ள மத்திய கட்டுமான பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியை தெற்கு ரயில்வேயின் முதன்மை தலைமைப் பொறியாளா் தேஷ் ரத்தன் குப்தா தொடங்கி வைத்தாா்.

இந்த நிகழ்வில் பாலங்கள், நெடுஞ்சாலைகள், சுரங்கப்பாதைகள், துறைமுகங்கள் போன்ற முக்கியமான உள்கட்டமைப்புகளின் வளா்ச்சி மற்றும் பராமரிப்பில் மத்திய கட்டுமான பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் முக்கிய பங்கு குறித்த தொழில் நுட்பங்கள் இடம் பெற்றிருந்தன. இந்நிகழ்ச்சியில் தொழில் துறையினா், கட்டுமானத்துறை வல்லுநா்கள்,அரசு அதிகாரிகள், மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மத்திய கட்டுமான பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஒருங்கிணைப்பு இயக்குநருமான முனைவா் என்.ஆனந்தவல்லி, இந்திய தரநிலைகள் பணியகம் துணை இயக்குநா் யு.எஸ்.பி. யாதவ், தலைமை விஞ்ஞானி, எஸ்.ஜி.என். மூா்த்தி,மூத்த முதன்மை விஞ்ஞானி முனைவா் அமா் பிரகாஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

SCROLL FOR NEXT